Showing posts with label இஸ்லாமிய பொதுஅறிவு. Show all posts
Showing posts with label இஸ்லாமிய பொதுஅறிவு. Show all posts

Monday, June 7, 2021

இஸ்லாமிய பொதுஅறிவு | Islamic General Knowledge | Islamic General Knowledge in Tamil - Part 4


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ இஸ்லாமிய பொதுஅறிவு | Islamic General Knowledge | Islamic General Knowledge in Tamil - Part 4 01) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா? வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 35:1 02)ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது? ஆது சமூகத்தாருக்கு. (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 69:6,7 03)ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்? ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்: (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 104-4,5,6,7) 04) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை? 1) கியாம நாள் 2) மழை இறங்குவது 3) கர்பங்களில் உள்ளவை 4) நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5) எந்த பூமியில் தாம் இறப்போம். 05) பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா? ‘பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்’ (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4:7) 06) கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன? கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 2:67) 07) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா? A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10) 08)நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்? A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160) 09)ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்? A) ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11) 10) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக: A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92) 11)நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது? A) ஜூதி மலையில் (11:44 ) 12)தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன? A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43) 13) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது? A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை 14)“ஸிஹாஹ் ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன? A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா 15) ஹுதைபிய்யா உடன்படிக்கையில் எந்த வார்த்தை இடம்பெறக் கூடாது என மக்கத்து காஃபிர்கள் கூறினர்? A) “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று மக்கத்து காபிர்கள் கூறினர். 16)எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? A) 1) மஸ்ஜிதுல் ஹரம் 2) மஸ்ஜிதுல் அக்ஸா 3) மஸ்ஜிதுன் நபவி. (புகாரி) 17)அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்? A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி) 18)நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்? A) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்) 19)தச்சராக இருந்த இறைத்தூதர் யார்? A) ஜக்கரிய்யா (அலை) (முஸ்லிம்) 20)‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்? A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #islamicquestion #islamicquiz #islamicanswer