Showing posts with label இபாதத் (வணக்கங்கள்). Show all posts
Showing posts with label இபாதத் (வணக்கங்கள்). Show all posts

Wednesday, June 2, 2021

இபாதத் (வணக்கங்கள்) | பாடம் -1 | ஃபர்ளு,வாஜிப் ,சுன்னத்,நபில் என்றால் என்ன ?அதன் சட்டம் என்ன ?


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இந்த காணொளியில் நாம் ஃபர்ளு,வாஜிப் ,சுன்னத்,நபில் என்றால் என்ன ? அதன் சட்டம் என்ன ?என்று பார்க்கபோகிறோம் இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையான பிரிவுகள் ஐந்து முதல் பிரிவு அகாயிதா (கொள்கைகள் ) இரண்டாவது பிரிவு இபாதத் ( வணக்கங்கள் ) ஃபர்ளு என்றால் என்ன ? அல்லாஹுவின் கட்டளை என்று எது உறுதிப்படுத்துகிறதோ அதுவே ஃபர்ளு ஆகும் . ஃபர்ளின் சட்டம் என்ன? ஃபர்ளை நிறைவேற்றினால் நன்மை கிடைக்கும் விட்டுவிட்டால் வேதனை கிடைக்கும் . ஃபர்ளை மறுப்பது குஃப்ர் ( இறைமறுப்பு ) ஆகும் . வாஜிபு என்றால் என்ன ? அல்லாஹ்வின் எந்தக் கட்டளை ஃபர்ளுக்கு நெருக்கமாக இருக்கின்றதோ அதுவே வாஜிபு ஆகும் . வாஜிபின் சட்டம் என்ன ? வாஜிபை நிறைவேற்றினால் நன்மை உண்டு விட்டுவிட்டால் வேதனை கிடைக்கும் என்ற அச்சம் உண்டு . வாஜிபை மறுப்பது பாவமாகும் (குஃப்ர் ஆகாது ) சுன்னத் என்றால் என்ன ? நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் எந்த நடைமுறையை வலியுறுத்தினார்களோ அல்லது பெரும்பாலான சமயங்களில் கடைப்பிடித்தார்களோ அல்லது விரும்பினார்களோ அவைகளே சுன்னத் ஆகும் . சுன்னத்தின் சட்டம் என்ன ? சுன்னத்தை நிறைவேற்றினால் நிறைய நன்மையும் உயர்வும் கிடைக்கும் .நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸ்ஸலாம்)அவர்களின் ஷபாஅத்து (பரிந்துரையும்) கிடைக்கும் சுன்னத்தை மறுப்பவன் பித்அத்துக்காரனாவான் (பாவியாவான் ) நபில் என்றால் என்ன? ஃபர்ளு,வாஜிப் ,சுன்னத்தான வணக்கங்களுக்கு அடுத்ததா செய்யக்கூடிய வணக்கம் நபிலான வணக்கம் நபிலின் சட்டம் என்ன ? நபிலான வணக்கங்கள் செய்தால் நன்மை கிடைக்கும் விட்டு விட்டால் பாவம் கிடையாது ஆனால் ஃ பர்ளான வணக்கங்களில் இருக்க கூடிய குறைகளை நபிலான வணக்கங்கள் போக்கிவிடும் இன்ஷாஅல்லாஹு கேட்டதின் படி அமல் செய்ய அல்லாஹுத்தஆலா தவ்ஃக் செய்வானாக ( ஆமீன் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam