Showing posts with label தினம் ஒரு நபி மொழி. Show all posts
Showing posts with label தினம் ஒரு நபி மொழி. Show all posts

Sunday, April 12, 2026

நிஜமான பொறுமை எது? நபிமொழியின் விளக்கம் | Hadith Series - 1

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

நம் வாழ்க்கையில் சோதனைகளும் துன்பங்களும் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அந்த நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே நம்முடைய ஈமானின் (இறைநம்பிக்கை) வலிமையைக் காட்டுகிறது.

Friday, September 17, 2021

மூன்றாம் கலிமாவின் சிறப்பு | தினம் ஒரு நபி மொழி - 42


மூன்றாம் கலிமாவின் சிறப்பு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ." இரண்டு கலிமாக்கள் (ஓதுவதற்கு ) நாவிற்கு மிக லேசானவையாகவும் ,அமல்கள் நிறுக்கப்படும் தராசில் மிகக் கனமுடையவையாகவும் ,ரஹ்மானாகிய அல்லாஹுவுக்கு மிகக் நேசமுள்ளவையாகவும் இருக்கின்றன . அவை ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ஸுப்ஹானல்லாஹில் அளீம் என்பவையாகும் " என ரஸூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் . நூல் { புகாரீ , முஸ்லீம் } Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Thursday, September 16, 2021

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் | தினம் ஒரு நபி மொழி - 41


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ٤- عَنْ عَائِشَةَ ؓ قاَلَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَغْزُوْ جَيْشٌ الْكَعْبَةَ، فَاِذَا كَانُوْا بِبَيْدَاءَ مِنَ اْلاَرْضِ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ كَيْفَ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيْهِمْ اَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُوْنَ عَلَي نِيَّاتِهِمْ. رواه البخاري، باب ما ذكر في الاسواق، رقم:٢١١٨ 4.புனித கஃபத்துல்லாஹ்வைத் தாக்கும் எண்ணத்துடன் ஒரு படை புறப்படும். அப்படை செடி, கொடிகளற்ற ஒரு மைதானத்தை அடைந்ததும் அவர்கள் அனைவரையும் பூமியில் புதைந்துவிடச் செய்யப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், அனைவரும் எவ்வாறு பூமியில் புதைந்து போவார்கள்? அங்கு கடைவீதியில் வியாபாரம் செய்வோரும் இருப்பார்கள், அப்படையில் சேராதவர்களும் இருப்பார்களே!'' என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதற்கு, அனைவரும் புதைந்துவிடுவர், பிறகு தத்தமது எண்ணத்திற்கேற்ப அவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, கியாமத் நாளில் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப அவர்களுடன் நடந்து கொள்ளப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Wednesday, September 1, 2021

இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் | தினம் ஒரு நபி மொழி -39


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் ٥٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا قَضَي اللهُ اْلاَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَاناً لِّقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَي صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ. رواه البخاري باب قول الله تعالي ولا تنفع الشفاعة عنده الا لمن اذن لها الاية رقم:٧٤٨١ அல்லாஹ் ஒரு காரியத்தைச் செயல்படுத்த விரும்பும் போது, வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையின் பயம், திடுக்கத்தால், நடுங்கியவர்களாகத் தங்கள் இறக்கைகளை அசைக்கிறார்கள். வழுவழுப்பான பாறையில் சங்கிலியால் அடித்தால் எழும் ஒலியைப் போல் அல்லாஹ்வின் கட்டளை மலக்குகளுக்குக் கேட்கிறது. மலக்குகளின் உள்ளத்திலிருந்து திடுக்கம் நீக்கப்பட்டதும், அவர்கள் தமக்குள், ஒருவர் மற்றவரிடம், உங்கள் இரட்சகன் என்ன கட்டளையிட்டான்?' என்று கேட்க, சத்தியத்தைக் கட்டளையிட்டான், அவன் உண்மையிலேயே உயர்ந்தவன், யாவரையும் விடப் பெரியவன்' என்று பதில் கூறுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Tuesday, June 15, 2021

உங்களுடைய ஈமானை புதிப்பித்து கொண்டே இருங்கள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -37


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "உங்களுடைய ஈமானை புதிப்பித்து கொண்டே இருங்கள் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியபோது " யாரஸூலல்லாஹ் , எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது ?" என்று கேட்கப்பட்டது " (என்ற கலிமா)வை அதிகமாக் கூறிக்கொண்டே இருங்கள் !" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் )அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் : (தப்ரானீ ,அஹ்மத் ,தர்கீப் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Monday, June 14, 2021

"அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான் " | நாளும் ஒரு நபி மொழி -36



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறினார்கள்: "ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் தமது பெரியத்தனத்தை (அபூதாலிப் அவர்களிடம் ,அவரது மரண நேரத்தில் )" தாங்கள் "லாஇலாஹ இல்லலல்லாஹு "என்ற கலிமா சொல்லி விடுங்கள் , நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன் " என்று சொன்னபோது , ' அபூதாலிப் மரணத்திற்கு பயந்து கலிமாச் சொல்லி விட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் , நிச்சயமாக நான் கலிமா சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன் " என்று கூறினார்கள் .அப்பொழுது நீங்கள் விரும்புவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது ,அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான் " என்ற ஆயத்தை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்தான்". நூல்: முஸ்லீம் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Sunday, June 13, 2021

மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்கு கிடைக்கும் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -35


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "அனைத்து அமல்களுடைய கூலிகளும் எண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் , மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்கு கிடைக்கும் . எனவே , எவர் அல்லாஹுத்தஆலாவுக்காகவும், அவனது ரஸூலுக்காகவும் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தாரோ ) செய்தாரோ , அல்லாஹுத்தஆலா ,அவனது ரஸூலின் திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் (குடிபெயர்ந்தாரோ )ஹிஜ்ரத் செய்தாரோ , அந்த ஹிஜ்ரத்தின் நன்மை அவருக்கு கிடைக்கும் . எவர் உலக நோக்கத்திற்க்காகவோ பெண்ணை மணமுடிக்கவோ ஹிஜ்ரத் செய்தாரோ , (அவரது ஹிஜ்ரத் அல்லஹுத்தஆலா ,அவனது ரஸூலுக்காக இருக்காது , மேலும்) வேறு எந்த நோக்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தாரோ (அல்லாஹுத்தஆலாவிடத்திலும் )அவரது ஹிஜ்ரத் அந்த நோக்கத்திற்காக என்று முடிவு செய்யப்படும் " என ரஸூலுல்லாஹி( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உம்ரிப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :புஹாரி Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Friday, June 11, 2021

இக்ராமுள்முஸ்லிமின் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -34


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹுமா )அவர்கள் அறிவித்துள்ளார்கள் நூல் :திர்மிதீ Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Monday, June 7, 2021

இல்மு (கல்வி )யின்சிறப்பு | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -33



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ உங்களில் மிகச் சிறந்தவர் குர் ஆனைக் கற்றுக் கொள்பவரும் , கற்றுக் கற்றுக்கொடுப்பவரும் ஆவார் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : (திர்மிதீ ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Sunday, June 6, 2021

"செல்வத்தை திரட்ட வேண்டும் என்று எனக்கு கட்டளையிடப்படவில்லை" | நாளும் ஒரு நபி மொழி -33


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "செல்வத்தை திரட்ட வேண்டும் ; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்கு கட்டளையிடப்படவில்லை . மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக்கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள் .மேலும் , தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில் , ஈடுபட்டிருப்பீராக ' என்றே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது "என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு நுஃபைர் (ரஹிமஹுல்லாஹ் )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :( ஷரஹுஸ்ஸுன்னா , மிஷ்காதுல மஸாபீஹ் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Friday, June 4, 2021

கலிமாவின் சிறப்பு| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -32


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "நான் என் பெரியத்தந்தை (அபுதாலிபு)க்கு (அவரது மரண வேளையில் ) சொல்லித்தந்து அதை அவர் ஏற்க மறுத்த அந்த கலிமாவை எவர் ஏற்றுக்கொள்வாரோ , அதுவே அவருடைய ஈடேற்றத்திற்குக் காரணமாகும் !" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :-(அஹ்மத் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Thursday, June 3, 2021

தேவையற்றவைகளை தவிர்த்தல் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -31


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது , நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :- திர்மிதீ தெளிவுரை :- இந்த ஹதீஸின் கருத்து , தேவையற்ற விஷியங்களை பேசாமல் இருப்பதும் மற்றும் வீணான செயல்களைவிட்டு விலகியிருப்பதும் ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளம் . மேலும் , மேற்கண்ட செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடமுள்ள இஸ்லாத்திற்கு அழகும், பொலிவுமாகும் என்பதாம் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Wednesday, June 2, 2021

அகபா நாளன்று ரஸூலுல்லாஹி (ஸல் ) அவர்களின் சிரமம் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -30



"யாரஸூலலல்லாஹ் , தாங்கள் உஹத்துடைய நாளைவிடக் கடினமான நாளைச் சந்த்தித்துள்ளீர்களா ? " என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா )அவர்கள் வினவினார்கள் . ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் , "உமது கோத்திரத்தாரால் நான் மிகுந்த சிரமத்திற்குள்ளானேன் . (தாயிஃபிலுள்ள )அகபா நாளன்று மிகவும் சிரமப்பட நேர்ந்தது . (தாயிஃவாசிகளின் தலைவன் )இப்னு அப்து யாலில் இப்னு அப்தி குலால் இடம் ,"என் மீது ஈமான் கொள்ளுங்கள் , எனக்கு உதவியாக இருங்கள் .சுதந்திரமாக தஃவத்துடைய பணி செய்யத் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவுங்கள் " என்று என் வேண்டுகோளை முன் வைத்தபோது ,அவன் என் பேச்சைக் கேட்கவில்லை . நான் (தாயிஃபைவிட்டு )மிகுந்த துக்கத்துடனும் ,கவலையுடனும் என் வழியில் (திரும்பி) நடக்கலானேன் . 'கர்ணே ஸ ஆலிப் ' என்ற இடத்தை அடைந்ததும் , எனது துக்கமும் கவலையும் )சிறுது தணிந்தது . அச்சமயம் என் தலைக்குமேல் ஒரு மேகத்துண்டு எனக்கு நிழலிடக் கண்டேன் ,நான் கூர்ந்து பார்த்தபோது அதில் ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலைஹிஸ்ஸலாம் )அவர்களைக் கண்டேன் .அவர்கள் என்னை அழைத்து ,"உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய வார்த்தையையும் ,அவர்களுடைய பதிலையும் அல்லாஹுத்தஆலா கேட்டான் . மலைகளுக்குரிய மலக்கைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளான் ,தாங்கள் விரும்பியதைக் கட்டளையிடுங்கள் " என்று கூறினார் அதற்குப்பின் மலைகளுக்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு என்னை அழைத்து ஸலாம் சொல்லிவிட்டு ,"முஹம்மதே !அல்லாஹுத்தஆலா உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய பேச்சுக்களைக் கேட்டான் . நான் மலைகளுக்குரிய மலக்கு .தாங்கள் விரும்பியதை எனக்கு கட்டளையிட்டுச் சொல்லி தங்கள் இரட்சகன் தங்களிடம் என்னை அனுப்பி வைத்துள்ளான் . தாங்கள் என்ன விரும்புகிறீர்கள் ? தாங்கள் விரும்பினால் மக்காவுடைய (அபூகுபைஸ் , அஹ்மர் என்ற ) இருமலைகளையும் இணையவைத்து (அம்மலைகளுக்கிடையில் இருக்கும் இவர்களை )நசுக்கிவிடுகிறேன் " என்று கேட்டார் ,"வேண்டாம்!" இவர்களது சந்ததிகளிலிருந்து அல்லாஹுத்தஆலாவை மட்டும் வணங்கி , அவனுக்கு எதையும் இணைவைக்காத மக்களை அல்லாஹுத்தஆலா பிறக்கச் செய்வான் என்று அல்லாஹுவிடம் ஆதரவு வைக்கிறேன்" என்று நபி (ஸல்லாலஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள். நூல் (முஸ்லீம்) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Monday, May 31, 2021

புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்தல்| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -29


"புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்ததின் காரணமாக என்னைப் பயமுறுத்தப்பட்டது போல் வேறுயாரையும் பயமுறுத்தப்படவில்லை அல்லாஹுத்தஆலாவின் பாதையில் நான் துன்முறுத்தப்பட்டது போல் வேறு யாரும் துன்புறுத்தப்படவில்லை .எனக்கும் பிலாலுக்கும் ஓர் உயிர்ப்பிராணி சாப்பிடும் அளவு கூட உணவு கிடைக்காத நிலையில் முப்பது பகல் முப்பது இரவுகள் தொடர்ச்சியாகக் கழிந்த்துள்ளன .பிலால் அவர்களின் கக்கத்தில் மறைத்துக் கொள்ளும் அளவு குறைந்த உணவே இருந்தது .மிக குறைந்த அளவு உணவெப் பொருளே இருந்தது " என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்( ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் :- (திர்மிதீ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Sunday, May 30, 2021

தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -28


நிச்சயமாக நான் தீனை மக்கள் வரையில் எத்திவைக்கக்கூடியவனே அல்லாஹ் தான் நீர்வழிகாட்டுகிறான் , மேலும் நிச்சயமாக நான் அறிவு ஞானத்தை பங்கு வைக்கக்கூடியவனே அல்லாஹ்தான் விளக்கத்தை கொடுக்கிறான் , என்ட்ரி ரஸூலுல்லாஹி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் :- (தப்ரானி, ஜாமிஉஸ் ஸங்ர் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Friday, May 28, 2021

இக்லாஸுடையயோர் புகழ் அடைவது ஆபத்தானதுஅல்ல| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -27


" அல்லாஹுத்தஆலா யாரைப் பாதுகாத்தானோ அவரைத் தவிர உலகக் காரியங்களிலோ ,தீனுடைய காரியங்களிலோ , ஒருவரை நோக்கி விரல்களை நீட்டி (சுட்டிக் காட்டிப் ) பேசப்படுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும் "என்று (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறாரகள் நூல் :- திர்மிதீ தெளிவுரை :- விரல்களால் சுட்டிக் காட்டப்படுத்தல் என்பதன் பொருள் பிரபல்யம் ஆகிவிடுதல் என்பதாம் .பிரபல்யம் ஆகுதல் ஆபத்தை விட்டும் நீங்கியதல்ல .ஏனெனில் , புகழ் கிடைத்தபின் , தான் பெரியவன் என்ற உணர்விலிருந்து தப்பிப்பது எவராலும் முடியாத காரியம் . ஆனால் ,ஒருவர் அவர் விரும்பாமலேயே அல்லாஹுத்தஆலாவின் தனது பேரருளால் நப்ஸ் , ஷைத்தானுடைய தீங்கை விட்டும் பாதுகாத்துவிட்டால் அது அவனது தனிப்பெரும் கருனை ! இத்தகைய இக்லாஸுடையயோர் புகழ் அடைவது ஆபத்தானதுஅல்ல . Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Thursday, May 27, 2021

நாற்பது நல்ல தன்மைகள்| தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -26


" நாற்பது நல்ல தன்மைகள் உள்ளன , அவற்றில் உயர்ந்த தரத்திலுள்ளது , ஒருவர் தனது ஆட்டை இன்னொருவருக்குக் கொடுத்து , அதனை வாங்கியவர் , அதனுடைய பாலிலிருந்து பலனடைந்து கொண்டு , பிறகு அதை அதன் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துவிடுவது . எவர் இந்த காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்தில் அல்லாஹுத்தஆலாவால் வாக்களிக்கப்பட்ட நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் , அமல் செய்தாலும் , அந்த நம்பிக்கையின் காரணமாக அல்லாஹுத்தஆலா அவரைச் சுவனத்தில் நுழையச் செய்வான் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :- (புஹாரி ) தெளிவுரை :- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் நாற்பது நல்ல காரியங்களை விபரமாகச் சொல்லாதது , ஒருவன் ஒவ்வொரு நன்மையையும் , ஹதீஸில் சிறப்பித்துக் கூறப்பட்ட நாற்பது காரியங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றெண்ணி அமல் செய்யவேண்டும் என்பதற்க்காகவேயாம் .(பத்ஹுல் பாரி ) மனிதன் ஒவ்வொரு அமலையும் நம்பிக்கையுடனும் , நன்மையை ஆதரவுவைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்து . இந்த அமலின் மீது அல்லாஹுத்தஆலாவால் வாக்களிக்கப்பட்ட இன்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நபிக்கையுடனும் , அந்த அமலுக்குரிய சிறப்புகளைக் கவனத்தில் வைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதாம் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Wednesday, May 26, 2021

எண்ணத்தூய்மை (இக்லாஸின் நிய்யத் ) | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -25


"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா உங்களின் உருவங்களையோ ,செல்வங்களையோ பார்க்கமாட்டான் . ஆயினும் , உங்களுடைய உள்ளங்களையும் , செய்லகளையும்மே பார்க்கிறான் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா( ராலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் :(முஸ்லீம்) தெளிவுரை :- உங்களின் உருவங்கள், செல்வங்களின் அடிப்படையில் அல்லாஹுத்தஆலாவின் பொருத்தம் முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக , உங்களது உள்ளங்கள் , செயல்களை பார்த்து உள்ளத்தில் எந்த அளவுக்கு தூய எண்ணம் இருந்தது என்பதை பார்த்து முடிவு செய்யப்படுகிறது Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Monday, May 24, 2021

முஸ்லீம் சகோதரருக்கு உதவுவதின் நன்மைகள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -24


எவர் தன ( முஸ்லீம் ) சகோதரருக்கு வயிறு நிரம்ப உணவளித்து , தண்ணீர் அருந்தச் செய்வாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹுத்தஆலா ஏழு அகழிகள் தொலைவு தூரத்தை ஏற்படுத்தி விடுவான் , இரு அகழிகளுக்குக்கிடையே உள்ள இடைவெளி ஐநூறு வருடத்தொலை தூரமாகும் " என ரஸூலுல்லாஹி (ஸல்லல்லஹு அலைஹி வஸ்ஸலாம் ) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருஇப்னு ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : (முஸ்தத்ரக ஹாகிம் ) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Saturday, May 22, 2021

நோன்பு,தொழுகை , தான தர்மங்களை விடச் சிறந்த காரியம் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -23


நோன்பு,தொழுகை , தான தர்மங்களை விடச் றந்த காரியத்தைச் நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்க ," அவசியம் கூறுங்கள் " என ஸஹாபாக்கள் கூறினர் . "மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது , ஏனெனில் , ஒற்றுமையின்றி இருப்பது தீனை (மார்கத்தை)ச் சிரைத்து விடக்கூடியது " (சவர்க்கத்தி ) தலைமுடியை முழுமையாகச் சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது தீனை இல்லாமலாக்கிவிடும் " என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் சொன்னதாக ஹஸ்ரத் அபூதர்தா (ரலி அல்லாஹுஅன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: திர்மிதீ Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam