Sunday, April 11, 2021

உளூ ஈமானின் பாதி | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -14



"உளூ ஈமானின் பாதி , அல்ஹம்துலில்லாஹ் சொல்வது {அமல்களின்} தராசை நன்மைகளால் நிரம்பிவிடும் , சுபஹானல்லாஹ் வும் அல்ஹம்துலில்லாஹ்வும் வானம் , பூமிக்கிடையே உள்ள இடைவெளியை நன்மையால் நிரப்பிவிடும் , தொழுகை பிரகாசம் . ஸதகா ஆதாரம் , பொறுமை வெளிச்சம் , குர் ஆன் உங்களுக்குச் சாதகமான பாதகமான அத்தாச்சி . குர் ஆணை ஓதி அதன்படி செயல்பட்டால் , அது உங்களது வெற்றிக்குக் காரணமாகும் , இல்லையெனில் , நீங்கள் தண்டிக்கப்படுவதற்குகாரணமாகி விடும் "என்று ரஸூலுல்லாஹி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் }அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூமாலிக் அஷ் அரி {ரலியல்லாஹு அன்ஹு } அவர்கள் அறிவித்துள்ளார்கள் .

 

தெளிவுரை :-  ஈமானால் உள்ளத்திலுள்ள ஷிர்க் குப்ரு  என்ற அசுத்தம் நீங்குவதுபோல் , உளுவாள் உடல் உறுப்புக்களின் அசுத்தம் நீங்குகிறது என்பதால் இந்த ஹதீஸில் உளூ ஈமானின் பாதி என்றும் கூறப்பட்டுள்ளது  ஒளி . இருளை விரட்டி  விடுவதைப்போல் தொழுகை பாவங்கள் மற்றும் மனக்கேடானவற்றை விட்டும் தடுப்பதால் தொழுகையை ஒளி என்று சொல்லப்பட்டுள்ளது மற்றொரு பொருள் : தொழுகையால் தொழுபவரின் முகம் கியாமத் நாளன்று ஒளிமயமாக இருக்கும் , உலகத்திலும் தொழுகையாளிகளின் முகம் செழிப்பாக  இருக்கும் . கப்ரு மற்றும் கியாமத்தின் இருளில் தொழுகை ஒளியாக இருக்கும் என்று தொழுகைக்கு மூன்றாவது கருத்தும் கூறப்பட்டுள்ளது . தர்மம் ஆதாரம் என்பதன் கருத்தாவது : பொருள் மனிதனுக்கு விருப்பமான ஒன்றாகும் அதை அல்லாஹுதஆலாவின் பாதையில் செலவிடுவதால் அது அவர் ஈமானில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகிவிடும் என்பதாகும்  பொறுமை ஒளி என்பதன் கருத்து , பொறுமையாளர் , அல்லாஹுத்தஆலாவின் கட்டளைகளை பூர்த்தி செய்தும் அவனுக்கு மாரு செய்யாமலும் சிரமங்களை சகித்தும் வருபவர் , தமக்குள் ஹிதாயத்தின் ஒளியை வைத்துக் கொண்டுள்ளார் என்பதாம்


Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment