அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
இந்த காணொளியில் நாம் ஃபர்ளு,வாஜிப் ,சுன்னத்,நபில் என்றால் என்ன ? அதன் சட்டம் என்ன ?என்று பார்க்கபோகிறோம்
இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையான பிரிவுகள் ஐந்து
முதல் பிரிவு அகாயிதா (கொள்கைகள் )
இரண்டாவது பிரிவு இபாதத் ( வணக்கங்கள் )
ஃபர்ளு என்றால் என்ன ?
அல்லாஹுவின் கட்டளை என்று எது உறுதிப்படுத்துகிறதோ அதுவே ஃபர்ளு ஆகும் .
ஃபர்ளின் சட்டம் என்ன?
ஃபர்ளை நிறைவேற்றினால் நன்மை கிடைக்கும் விட்டுவிட்டால் வேதனை கிடைக்கும் .
ஃபர்ளை மறுப்பது குஃப்ர் ( இறைமறுப்பு ) ஆகும் .
வாஜிபு என்றால் என்ன ?
அல்லாஹ்வின் எந்தக் கட்டளை ஃபர்ளுக்கு நெருக்கமாக இருக்கின்றதோ அதுவே வாஜிபு ஆகும் .
வாஜிபின் சட்டம் என்ன ?
வாஜிபை நிறைவேற்றினால் நன்மை உண்டு விட்டுவிட்டால் வேதனை கிடைக்கும் என்ற அச்சம் உண்டு . வாஜிபை மறுப்பது பாவமாகும் (குஃப்ர் ஆகாது )
சுன்னத் என்றால் என்ன ?
நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் எந்த நடைமுறையை வலியுறுத்தினார்களோ அல்லது பெரும்பாலான சமயங்களில் கடைப்பிடித்தார்களோ அல்லது விரும்பினார்களோ அவைகளே சுன்னத் ஆகும் .
சுன்னத்தின் சட்டம் என்ன ?
சுன்னத்தை நிறைவேற்றினால் நிறைய நன்மையும் உயர்வும் கிடைக்கும் .நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸ்ஸலாம்)அவர்களின் ஷபாஅத்து (பரிந்துரையும்) கிடைக்கும் சுன்னத்தை மறுப்பவன் பித்அத்துக்காரனாவான்
(பாவியாவான் )
நபில் என்றால் என்ன?
ஃபர்ளு,வாஜிப் ,சுன்னத்தான வணக்கங்களுக்கு அடுத்ததா செய்யக்கூடிய வணக்கம் நபிலான வணக்கம்
நபிலின் சட்டம் என்ன ?
நபிலான வணக்கங்கள் செய்தால் நன்மை கிடைக்கும் விட்டு விட்டால் பாவம் கிடையாது ஆனால் ஃ பர்ளான வணக்கங்களில் இருக்க கூடிய குறைகளை நபிலான வணக்கங்கள் போக்கிவிடும்
இன்ஷாஅல்லாஹு கேட்டதின் படி அமல் செய்ய அல்லாஹுத்தஆலா தவ்ஃக் செய்வானாக ( ஆமீன் )
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment