Sunday, January 31, 2021

ஏழு காரியங்கள் நிகழும் முன் அமல்களை செய்து கொள்ளுங்கள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -9



ஏழு காரியங்கள் நிகழும் முன் அமல்களை விரைவாகச் செய்து கொள்ளுங்கள் . அனைத்தையும் மறக்கடித்துவிடும் வறுமையை எதிர்பார்கிறீர்களா ?அல்லது மமதையில் கொண்டு செல்லும் சீமான் தனத்தை எதிர்பார்கிறீர்களா ? அல்லது செயலிழக்க செய்யும் வியாதியை எதிர்பார்கிறீர்களா ?அல்லது அறிவை இலக்கவைக்கும் முதுமையை எதிர்பார்க்கிறீர்களா (சில சமயங்களில் தவுப செய்வதற்கும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை ) மறைக்கபட்ட  தீமைகளில் மிகக் கேட்ட தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்கிறீர்களா ? அல்லது கியாமத்நாளின் வருகையை எதிர்பார்கிறீர்களா ?அதுவே ,கடுமையானதும் மிகக் கசப்பானதுமாகும் என்று ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள்  கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் 
(திர்மிதி )
தெளிவுரை : இந்த ஏழுகாரியங்களில் ஏதேனும் ஒன்று நிநிகழ்வதறக்கு முன் ,நற்செயல்கள் மூலம் மறுமைக்குறிய தயாரிப்பை மனிதன் மேற்கொள்ளவேண்டும் .இக்காரியங்களில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து நற்செயல்கள் செய்ய முடியாமல் ஆகிவிடலாம்.

Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment