ஜமாஅத்துத் தொழுகையின் நன்மைகள் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -11
"முஅத்தினுடைய குரல் கேட்கும் தொலைவு வரை அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். (அவருடைய குரல் கேட்கும் தொலைவுவரை உள்ள இடங்கள் பாவங்களால் நிரம்பி இருந்தாலும் . அவை யாவும் மன்னிக்கப்பட்டுவிடும்). அவர் பாங்குச் சப்தத்தைக் கேட்கும் உயிருள்ளவை, உயிரற்றவை யாவும் கியாமத் நாளில் அவருக்காக சாட்சி சொல்லும் . முஅத்தினுடைய பாங்கு சப்தாம் கேட்கும்த் தொழ வருவோருக்கு 25 தொழுகைகளின் நன்மைகள் எழுதப்படுகிறது. ஒரு தொழுகையிலிருந்து மறு தொழுகைவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது." என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தெளிவுரை:-
25 தொழுகைகளின் நன்மைகள் முஅத்தினுக்கு எழுதப்படுகிறது என்றும் ஒரு பாங்கிலிருந்து மறு பாங்குவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று ஆலிம்களில் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
#hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
No comments:
Post a Comment