ஈமான் என்றால் என்ன ? | தினம் ஒரு நபி மொழி | Nabigal Nayagam words| நாளும் ஒரு நபி மொழி -7
ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம் )அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் )அவர்களிடம் ,"ஈமான் என்றால் என்ன ?" என்று கேட்டார்கள் ,"அல்லாஹுதஆலாவின் மீதும் , மறுமை நாளின் மீதும் , மலக்குகள் மீதும் , அல்லாஹுவின் வேதங்கள் மீதும் ,நபிமார்கள் மீதும் நீர் (ஈமான் ) நம்பிக்கை கொள்வது . இறப்பதின் மீதும் , இறந்தபின் மீண்டும் எழுப்பப்படுவதின் மீதும் நம்பிக்கை கொள்வது !சொர்க்கம் ,நரகம் , கேள்வி கணக்கு இன்னும் அமல்களை எடைபோடும் தராசின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் , நல்லவை , தீயவை யாவும் விதிக் கொண்டு ஏற்படும் என்பதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் !" என்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவ்ரகள் கூறினார்கள் ,சொல்லப்பட்ட அனைத்து காரியங்களின் மீதும் நம்பிக்கை கொள்வதால் நான் ஈமான் உடையவனாக ஆகிவிடுவேனா ?" என்று
ஹஜ்ரத் ஜிப்ரயீல் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் கேட்க ,"இவைகளின் மீது நம்பிக்கை கொள்வீரானால் நீர் ஈமான் உடையவராக ஆகிவிடுவீர் !"என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் .
(முஸ்னத் அஹமத் )
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
#hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment