Sunday, January 24, 2021

லா இலாஹ இல்லல்லாஹ் சிறப்பு -2 | தினம் ஒரு நபி மொழி | Nabigal Nayagam words| நாளும் ஒரு நபி மொழி -6


ஹஜ்ரத் ஷத்தாத் ( ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள்  அறிவிப்பதாவது : எனது தந்தையர் ஹஜ்ரத் ஷத்தாத் (ரலி அல்லாஹு அன்ஹு )அவர்கள் கீழ்காணும் சம்பவத்தைக்  கூறினார்கள் அச்சம்பவத்தின்  போது என் தந்தையுடன் இருந்து ஹஜ்ரத் உபாதா( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதை உண்மைப்படுத்தினார்கள்  .

 நாங்கள் ஒருமுறை ரஸூலுல்லாஹி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ,"உங்களில் எவரேனும் அந்நியர் (முஸ்லிமல்லாதவர் )இருக்கின்றனரா ?" என்று வினவினார்கள் . ஒருவரும் இல்லை,என்று  நாங்கள் பதிலளித்தோம். பிறகு கதவை மூடச் சொல்லி விட்டு , உங்கள் கைகளை உயர்த்தி  (லாயிலாஹ இல்லல்லாஹு )என்று  சொல்லுங்கள் !" என்று சொன்னார்கள் . நங்கள் சிறிது நேரம் கைகளை உயர்த்திய வண்ணம்  இருந்தோம் ,(கலிமாவையும் கூறினோம் )பின்பு நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  தங்கள் கரத்தைத்  தாழ்த்தி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறிய பின் "யாஅல்லாஹ்" நீ இக்கலிமாவைத் தந்து என்னை அனுப்பியுள்ளாய் ! இதை(எத்திவைக்க ) எனக்குக் கட்டளையிட்டுள்ளாய் ! இக்கலிமாவுக்காக சொர்க்கத்தை வாக்களித்துள்ளாய் !நீ வாக்குமீறாதவன் "என்றுசொன்னார்கள் , பிறகு எங்களை பார்த்து ,"அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் என்றான் நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் !" என மொழிந்தார்கள் . (முஸ்னத் அஹ்மத் ,தப்ரானி , பஸ்ஸார் ,மஜ்மவுஸ்ஸவாயித் )


No comments:

Post a Comment