Sunday, May 2, 2021

நபி( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) அழுகை | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -16



ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் [ரலியல்லாஹு அன்ஹு ] அவர்கள் கூறினார்கள் , என்னிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் , " எனக்குக் குர் ஆணை ஓதிக்காட்டுங்கள் " என்றார்கள் . ' யாரஸூலல்லாஹ் ,தங்கள்மீது குர் ஆன் இறங்கியிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா ?" என்று நான் கேட்டேன் , "வேறுறொருவர் குர் ஆன் ஓத நான் கேட்க விரும்புகிறேன் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் சொல்ல , நான் சூரா நிஸாவை ஓதினேன் . " நபியே , ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் அவர்களுடைய நபியை சாட்சியாக நாம் கொண்டுவரும் போது ( உம்மை நிராகரித்த இவர்கள் யாவருக்கும் (விரோதமான ) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால் உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும் ?" என்ற ஆயத்தை அடைந்ததும் , போதும் நிறுத்திக் கொள்வீராக " என்றார்கள் . நான் அன்னாரை நோக்கியபோது , அன்னாரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது ". Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment