" நாற்பது நல்ல தன்மைகள் உள்ளன , அவற்றில் உயர்ந்த தரத்திலுள்ளது , ஒருவர் தனது ஆட்டை இன்னொருவருக்குக் கொடுத்து , அதனை வாங்கியவர் , அதனுடைய பாலிலிருந்து பலனடைந்து கொண்டு , பிறகு அதை அதன் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துவிடுவது . எவர் இந்த காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்தில் அல்லாஹுத்தஆலாவால் வாக்களிக்கப்பட்ட நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் , அமல் செய்தாலும் , அந்த நம்பிக்கையின் காரணமாக அல்லாஹுத்தஆலா அவரைச் சுவனத்தில் நுழையச் செய்வான் " என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நூல் :- (புஹாரி )
தெளிவுரை :- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் நாற்பது நல்ல காரியங்களை விபரமாகச் சொல்லாதது , ஒருவன் ஒவ்வொரு நன்மையையும் , ஹதீஸில் சிறப்பித்துக் கூறப்பட்ட நாற்பது காரியங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றெண்ணி அமல் செய்யவேண்டும் என்பதற்க்காகவேயாம் .(பத்ஹுல் பாரி )
மனிதன் ஒவ்வொரு அமலையும் நம்பிக்கையுடனும் , நன்மையை ஆதரவுவைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்து . இந்த அமலின் மீது அல்லாஹுத்தஆலாவால் வாக்களிக்கப்பட்ட இன்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நபிக்கையுடனும் , அந்த அமலுக்குரிய சிறப்புகளைக் கவனத்தில் வைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதாம்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment