"யாரஸூலலல்லாஹ் , தாங்கள் உஹத்துடைய நாளைவிடக் கடினமான நாளைச் சந்த்தித்துள்ளீர்களா ? " என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா )அவர்கள் வினவினார்கள் . ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் , "உமது கோத்திரத்தாரால் நான் மிகுந்த சிரமத்திற்குள்ளானேன் .
(தாயிஃபிலுள்ள )அகபா நாளன்று மிகவும் சிரமப்பட நேர்ந்தது . (தாயிஃவாசிகளின் தலைவன் )இப்னு அப்து யாலில் இப்னு அப்தி குலால் இடம் ,"என் மீது ஈமான் கொள்ளுங்கள் , எனக்கு உதவியாக இருங்கள் .சுதந்திரமாக தஃவத்துடைய பணி செய்யத் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவுங்கள் " என்று என் வேண்டுகோளை முன் வைத்தபோது ,அவன் என் பேச்சைக் கேட்கவில்லை . நான் (தாயிஃபைவிட்டு )மிகுந்த துக்கத்துடனும் ,கவலையுடனும் என் வழியில் (திரும்பி) நடக்கலானேன் . 'கர்ணே ஸ ஆலிப் ' என்ற இடத்தை அடைந்ததும் , எனது துக்கமும் கவலையும் )சிறுது தணிந்தது . அச்சமயம் என் தலைக்குமேல் ஒரு மேகத்துண்டு எனக்கு நிழலிடக் கண்டேன் ,நான் கூர்ந்து பார்த்தபோது அதில் ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலைஹிஸ்ஸலாம் )அவர்களைக் கண்டேன் .அவர்கள் என்னை அழைத்து ,"உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய வார்த்தையையும் ,அவர்களுடைய பதிலையும் அல்லாஹுத்தஆலா கேட்டான் . மலைகளுக்குரிய மலக்கைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளான் ,தாங்கள் விரும்பியதைக் கட்டளையிடுங்கள் " என்று கூறினார் அதற்குப்பின் மலைகளுக்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு என்னை அழைத்து ஸலாம் சொல்லிவிட்டு ,"முஹம்மதே !அல்லாஹுத்தஆலா உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய பேச்சுக்களைக் கேட்டான் . நான் மலைகளுக்குரிய மலக்கு .தாங்கள் விரும்பியதை எனக்கு கட்டளையிட்டுச் சொல்லி தங்கள் இரட்சகன் தங்களிடம் என்னை அனுப்பி வைத்துள்ளான் . தாங்கள் என்ன விரும்புகிறீர்கள் ? தாங்கள் விரும்பினால் மக்காவுடைய (அபூகுபைஸ் , அஹ்மர் என்ற ) இருமலைகளையும் இணையவைத்து (அம்மலைகளுக்கிடையில் இருக்கும் இவர்களை )நசுக்கிவிடுகிறேன் " என்று கேட்டார் ,"வேண்டாம்!" இவர்களது சந்ததிகளிலிருந்து அல்லாஹுத்தஆலாவை மட்டும் வணங்கி , அவனுக்கு எதையும் இணைவைக்காத மக்களை அல்லாஹுத்தஆலா பிறக்கச் செய்வான் என்று அல்லாஹுவிடம் ஆதரவு வைக்கிறேன்" என்று நபி (ஸல்லாலஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் (முஸ்லீம்)
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment