Sunday, June 13, 2021

மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்கு கிடைக்கும் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -35


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ "அனைத்து அமல்களுடைய கூலிகளும் எண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் , மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்கு கிடைக்கும் . எனவே , எவர் அல்லாஹுத்தஆலாவுக்காகவும், அவனது ரஸூலுக்காகவும் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தாரோ ) செய்தாரோ , அல்லாஹுத்தஆலா ,அவனது ரஸூலின் திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் (குடிபெயர்ந்தாரோ )ஹிஜ்ரத் செய்தாரோ , அந்த ஹிஜ்ரத்தின் நன்மை அவருக்கு கிடைக்கும் . எவர் உலக நோக்கத்திற்க்காகவோ பெண்ணை மணமுடிக்கவோ ஹிஜ்ரத் செய்தாரோ , (அவரது ஹிஜ்ரத் அல்லஹுத்தஆலா ,அவனது ரஸூலுக்காக இருக்காது , மேலும்) வேறு எந்த நோக்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தாரோ (அல்லாஹுத்தஆலாவிடத்திலும் )அவரது ஹிஜ்ரத் அந்த நோக்கத்திற்காக என்று முடிவு செய்யப்படும் " என ரஸூலுல்லாஹி( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உம்ரிப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிக்கிறார்கள் . நூல் :புஹாரி Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment