Wednesday, September 1, 2021

இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் | தினம் ஒரு நபி மொழி -39


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் ٥٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا قَضَي اللهُ اْلاَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَاناً لِّقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَي صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ. رواه البخاري باب قول الله تعالي ولا تنفع الشفاعة عنده الا لمن اذن لها الاية رقم:٧٤٨١ அல்லாஹ் ஒரு காரியத்தைச் செயல்படுத்த விரும்பும் போது, வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையின் பயம், திடுக்கத்தால், நடுங்கியவர்களாகத் தங்கள் இறக்கைகளை அசைக்கிறார்கள். வழுவழுப்பான பாறையில் சங்கிலியால் அடித்தால் எழும் ஒலியைப் போல் அல்லாஹ்வின் கட்டளை மலக்குகளுக்குக் கேட்கிறது. மலக்குகளின் உள்ளத்திலிருந்து திடுக்கம் நீக்கப்பட்டதும், அவர்கள் தமக்குள், ஒருவர் மற்றவரிடம், உங்கள் இரட்சகன் என்ன கட்டளையிட்டான்?' என்று கேட்க, சத்தியத்தைக் கட்டளையிட்டான், அவன் உண்மையிலேயே உயர்ந்தவன், யாவரையும் விடப் பெரியவன்' என்று பதில் கூறுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment