ஹஸ்ரத்
இப்னுஅப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்
, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் ) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களிடம் ,"அப்பாஸ் அவ்ரகளே , எனது சிறிய தந்தையே
! நான் உங்களுக்கு ஒரு நன்கொடை வழங்கட்டுமா
? ஓர் அன்பளிப்பை கொடுக்கட்டுமா ? ஒரு வெகுமதியை அளிக்கட்டுமா
? " பத்துப் பலன் களை உங்களுக்கு
ஈட்டித்தரும் ஒரு அமலை அறிவிக்கட்டுமா
? அதைச் செய்தால் அல்லாஹுத்தஆலா உங்களுடைய முந்திய பிந்தியது , பழையது புதியது , அறிந்து செய்தது அறியாமல் செய்தது , சிறியது பெரியது ,ரகசியமாக செய்தது பகிரங்கமாக செய்தது அனைத்தையும் மன்னித்துவிடுவான் . அந்த அமலாவது :- நீர்
,நான்கு ரக் அத்துகள் (தஸ்
பீஹ் தொழுகை ) தொழுவதாகும் ! ஒவ்வொரு ரக் அத்திலும் சூரத்துல்
பாத்திஹா வுடன் மற்றொரு சுற்றவும் ஓதுவீராக . முதல் ரக் அத்தில் கிராஅத்
ஓதி முடிந்ததும் ருகூவு செய்வதற்கு முன் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 முறை ஓதுவீராக .பின்பு
ருகூவு செய்து அதிலும் 10 முறை இந்த கலிமாக்களை
ஓதுவீராக .பிறகு ருகூவு லிருந்து எழுந்து நின்ற நிலையில் 10 முறை ஓதுவீராக
.பின்பு ஸஜ்தா ச் செய்விராக .ஸஜ்தாவிலும்
இக்கலிமாக்களைப் 10 முறை ஓதுவீராக ஸஜ்தாவிலிருந்து
எழுந்து அமர்ந்து 10 முறையும், பிறகு இரண்டம் ஸஜ்தாவில் 10 முறையும் , இரண்டாம் ஸஜ்தாவிலிருந்து எழுந்து உட்கார்ந்த நிலையில் 10 முறையும் ஓதுவீராக . இவ்வாறே நான்கு ரக் அத்துக்களும் தொழுவீராக
.இந்த முறையில் ஒவ்வொரு ரக் ஆத்திலும் எழுபத்தைந்து
முறை இக்கலிமாக்களை ஓதி கொள்வீராக (சிறிய
தந்தையே ) உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு முறை , இத்தொழுகையை
தொழவும் , ஒவ்வொரு நாளும் தொழ இயலாவிட்டால் ஒவ்வொரு
ஜூம் ஆ நாளன்றும் தொழவும்
.அதுவும் இயலாவிட்டால்
மாதம் ஒரு முறை தொழவும்
, அதற்கும் இயலாவிட்டால் வருடம் ஒரு முறை
தொழவும் .அதற்கும் இயலாவிட்டால் வாழ்நாளில் ஒருமுறையாவது தொழவும் " என்று கூறினார்கள்
Sunday, February 21, 2021
பத்துப் பலன்களை ஈட்டித்தரும் ஒரு அமல் | தினம் ஒரு நபி மொழி | நாளும் ஒரு நபி மொழி -13
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment