Monday, May 31, 2021

இஸ்லாமிய பொதுஅறிவு | Islamic General Knowledge | Islamic General Knowledge in Tamil - Part 3


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ இஸ்லாமிய பொதுஅறிவு | Islamic General Knowledge | Islamic General Knowledge in Tamil - Part 3 1 .நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன? 6 சூராக்கள யூனுஸ், (அல்-குர்ஆன் 10வது அத்தியாயம்) ஹூத் (அல்-குர்ஆன் 11வது அத்தியாயம்) யூசுப், (அல்-குர்ஆன் 12வது அத்தியாயம்) இப்ராஹீம், (அல்-குர்ஆன் 14வது அத்தியாயம் ) நூஹ், (அல்-குர்ஆன் 71வது அத்தியாயம்) முஹம்மது (ஸல்) (அல்-குர்ஆன் 47வது அத்தியாயம்) 2. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது? கலிபா உஸ்மான் (ரலி) 3. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ? அலி (ரலி) அவர்கள். 4 . இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ? காலித் பின் வலீத்(ரலி) 5. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ? லவ்ஹூல் மஹ்ஃபுள் 6. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ? கிராமன் - காத்திபீன் 7. கலிபா என்பவர் யார்? இஸ்லாமிய ஆட்சியாளர் 8. 21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன? துவா பள்ளத்தாக்கு. இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 19:52 & 79:16 & 20:12) 9. ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது? சூரத்துத் தவ்பா (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 9வது அத்தியாயம்) 10. ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது? சூரத்துந் நம்ல் -எறும்புகள் (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 27:30) 11.சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை? 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 20:118,119) 12. இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்? யஹ்யா (அலை). (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 19:7 &3:39) ஈஸா (அலை) (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 3:45) 13. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள். 14.நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்? அரேயிர்களின் உயர் குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள். 15'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன? அப்துல் முத்தலிஃப் 16.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன? அப்துல்லாஹ் 17.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? ஆமினா அம்மையார் 18.முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்? கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். பிறந்த தேதியில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் பல அறிஞர்களின் கருத்துப்படி ரபியுல் அவ்வல் மாதம் 12-ல் பிறந்தார்கள் என்பதாகும். 19.முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது? யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது. 20. முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்? பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார். Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #islamicquestion #islamicquiz #islamicanswer

No comments:

Post a Comment